திரிபோஷ தயாரிப்பு குழுமம் தமது தயாரிப்பை சுபோஷ என்ற புதிய நாமத்தில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
திரிபோஷ மேலதிக தயாரிப்புக்களே, சுபோஷ தயாரிப்பாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சுபோஷ தயாரிப்புக்களை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தயாரிப்பு கொள்ளளவு 900 மெற்றிக் தொன்னையும் தாண்டியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறு தனியார் நிறுவனங்களுடன் போட்டித்தன்மையை ஏற்படுத்தக்கூடிய இது அமையும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த தயாரிப்பு பணிகளுக்கென வருடாந்தம் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களிமிருந்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் சோளம், பத்தாயிரம் மெற்றிக் தொன் சோயா மற்றும் பத்தாயிரம் கொழும்பு சேர்க்கப்பட்ட பால் ஆகியன கொள்வனவு செய்யப்படுகின்றன.