தாஜுடீன் கொலை சம்பவத்திற்கு பின்னால் கடந்த அரசாங்கத்தின் கொலைக்கார கை ஒன்று உள்ளதாக தற்போது சாட்சியுடன் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ரகர் வீரர் தாஜுடீன் மர்மமாக கொலை செய்வதற்காக ராஜபக்ச ரெஜிமென்டின் மர்ம இடமான ஜனாதிபதி மாளிகை இந்த செயற்பாட்டிற்கு முக்கிய இடமாக பயன்படுத்தப்பட்டுள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாஜுடீன் கொலை சம்பவம் இடமபெற்ற காலத்தில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க அப்போதைய ஜனாதிபதி மாளிகையில் தகவல் பரிமாற்றிக் கொள்வதற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து அரச சார்பு சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் ஜெராம் டோஸ்கியிடம் குற்றப் புலனாய்வு பிரிவின் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் தொலைப்பேசி தரவுகள் உள்ளடக்கப்பட்ட மத்திய தரவிற்கான ஆய்வு அறிக்கையுடன் இந்த இலக்கங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்துவதாக நீதிமன்றில் தகவல் வெளியிட்ட குற்றப் புலனாய்வு பிரிவு, அநுர சேனாநாயக்க மூன்று தொலைப்பேசி இலக்கங்களை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கொலை சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பில் தரவுகள் பெற்றுக் கொண்டு ஆய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.