அடேங்கப்பா! மிடாஸ் மூலம் 20 ஆயிரம் கோடி! ஜெ.,வை மிஞ்சிய சசிகலா!

2002ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் இல்லாமல் மூவரால் துவங்கப்பட்ட மிடாஸ் என்னும் மதுபான ஆலை காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் துவங்கப்பட்டது.

2003 ம் ஆண்டு மதுபான கடைகளை அரசே எடுத்து நடத்த முடிவு செய்தது. அப்போது சுதாரித்து கொண்ட சசிகலா, தனது உறவினர்களான ராகவணன், சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் ஆகியோர் உள்ளே நுளைத்தார்.
சசி குடும்பத்தினர் உள்ளே சென்று பின் நிறுவனத்தை துவங்கியவர்களை வெளியேற்றினர்.

அதன் பிறகு டாஸ்மாக் நிறுவனத்தில் ஒட்டு மொத்த சப்ளையராக மிடாஸ் மாறியது. அது முதல் ராக்கெட் வேகத்தில் வர்த்தகம் உயர்ந்தது.
2002ம் ஆண்டு மிடாஸ் துவங்கிய போது வெறும் 16 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு செய்தது.

அரசு டாஸ்மாக் மதுக்கடை துவங்கிய ஆண்டில் வெறும் 130.82 கோடி மட்டுமே அரசின் சார்பில் கொள்முதல் செய்யபட்டது. அடுத்த அடுத்த ஆண்டுகளில் கொள்முதல் தொகை 490.06 கோடி — 872 கோடி என உயர்ந்தது.

2006ம் ஆண்டு தி.மு.க.,ஆட்சியில் மிடாஸ் நிறுவனத்தின் கொள்முதல் செய்வதை நிறுத்தியது. தங்கள் நிறுவனத்தில் அரசு கொள்முதல் செய்யவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ராவணன் மனு செய்ததன் விளைவாக 2007—08 துவங்கி 2010—11ல் மட்டும் 2,773 கோடிக்கு மிடாஸ் நிறுவனத்தில் மதுபானங்களை டாஸ்மாக் கொள்முதல் செய்ததது.

மீண்டும் அதிமுக ஆட்சி வந்த 2011 முதல் 2016 வரை டாஸ்மாக் கொள்முதல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

2011—12ம் ஆண்டில் 1,404 கோடி ரூபாய், 2012—13ம் ஆண்டில் 1,729 கோடி ரூபாய், 2013—14ம் ஆண்டில் 2,280 கோடி ரூபாய், 2014&15ம் ஆண்டில் 2,739 கோடி ரூபாய், 2015—16ம் ஆண்டில் அதிகபட்சமாக 3,283 கோடி ரூபாய் என 11 ஆயிரத்து 432 கோடி ரூபாய்க்கு சரக்குகளை அரசுக்கு விற்றுள்ளது மிடாஸ் நிறுவனம்.

2016ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.,ஆட்சி தொடர்ந்ததால், நடப்பு நிதியாண்டில், மிடாஸ் நிறுவன கொள்முதல் 4,000 கோடியை தண்டியதாக தெரிகிறது.

மதுக்கடையை அரசே எடுத்து நடத்த துவங்கியதில் இருந்து, 14 ஆண்டுகளில் மிடாஸ் நிறுவனம், அரசுக்கு ரூ 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்துள்ளது.

11 நிறுவனங்களிடம் இருந்து அரசு மதுபானம் கொள்முதல் செய்தாலும் அதிகப்படியாக மிடாஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்படுகிறது.

சசிகலா மற்றும் இளவரசிக்கு சொந்தமான இரு நிறுவனங்கள் மிடாஸ் நிறுவனத்தில் பெரும்பங்கை வாங்கியுள்ளது. மிடாஸ் நிறுவனத்தில் இயக்குனர்கள் வர்த்தகம், ஆண்டு வருவாய் இவற்றை எல்லாம் பார்த்தால் யாரும் புரிந்து கொள்ள முடியாத அளவில் தலை சுற்றிவிடும்.