மக்களின் கடும் அதிருப்தியை சமாளிக்க சுற்றுப் பயணம் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்கள் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியல் சூழல் பெரும்பாலும் குழப்பத்திலும் பரபரப்பிலுமே உள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின் முதல்வராக எடபாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். ஆனால், அவர் முதல்வராக பதவியேற்றது பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகரில் இருந்து அவர் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

மேலும், 7ஆம் தேதி அவரது சொந்த மாவட்டமான சேலம் செல்கிறார். பிறகு அங்கிருந்து திருச்சிக்குச் செல்கிறார். அடுத்தநாள், 8ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு செல்கிறார்கள்.

வரும் மார்ச் 8ஆம் முன்னாள் முதல்வர் ஓ.பனீர் செல்வம் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும். ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடியின் சுற்றுப்பயணமும் ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.