அதிமுக-வின் பொதுச் செயலாளரும் மற்றும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்கள் தான் தற்போது அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலர் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் கூறிய தகவல்கள் இது தான் என்று வெளியிட்டுள்ளது.
அதில், ஜெயலலிதாவை பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் தான் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், அப்போது, பாத்ரூமில் விழுந்துவிட்டதாகவும், இதனால் அவர் மயக்க நிலையில் இருந்ததாக சேர்க்கைக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மரணம் நேரிட்டால், பிரேத பரிசோதனை செய்யவேண்டியிருக்கும் என்பதால், அதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் எம்.எல்.சி. பதிவு செய்யவில்லை.
சேர்க்கப்பட்டபோது மயக்கநிலையில் இருந்தவருக்கு, 15 நாட்களுக்குப் பிறகே சி.டி.ஸ்கேன் எடுத்துள்ளனர் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
லண்டனிலிருந்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் முதல் முறை ஜெயலலிதாவை பார்த்த போது, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகத்திடமும், சசிகலாவிடமும் சொல்லியுள்ளார். ஆனால் சசிகலாவோ இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதே வார்த்தையை ஜெயலலிதாவிடம் மருத்துவர் ரிச்சர்ட் கூறிய போது அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அப்போது இருந்த கட்டத்தில் சசிகலாவை மீறி எந்த முடிவும் எடுக்கமுடியாத சூழல்தான் அங்கு நிலவியதாகவும் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் ஜெயலலிதாவின் உடல் நல முன்னேற்றத்தை பார்க்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் விரும்பியபோது, அனுமதி கொடுக்கப்படவில்லை. அதே போன்று ரிச்சர்ட்டின் வருகைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு எல்லாம் காரணம் சசிகலா தான் என்று கூறப்படுகிறது.
டிசம்பர் 3 ஆம் திகதி வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் டாண்டன், ஜெயலலிதாவைச் சந்தித்து தினமும் ஒரு முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்க கூடாது, உங்களுக்காக பலர் வெளியில் நிற்கின்றனர் அவர்களையும் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த விஷயம் சசிகலாவுக்கு தெரியவர உடனே அதிகாரிகள் மற்றும் அப்பல்லோ நிர்வாகத்தையும் விளாசியிருக்கிறார் சசிகலா.
ஜெயலலிதாவால் ஆக்டிவ்வாக செயல்படமுடியாது என்ற நிலையில், அதிகாரங்கள் பலவற்றையும் வலியுறுத்தி சசிகலா விவாதம் செய்துள்ளார். இதனால் தனது முக பாவனைகளால் எதிர்ப்பை காட்டியிருக்கிறார் ஜெயலலிதா.
இந்த அழுத்தத்தின் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.