கோலியின் எதிர்மறையான சிந்தனை சக வீரர்களையும் ஒட்டிக் கொண்டது: மார்க் வாக் கடும் தாக்கு

இந்தியாவின் மோசமான ஆட்டத்திற்கு விராட் கோலியின் எதிர்மறையான சிந்தனைதான் காரணம் என்று ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்க் வாக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இதுகுறித்து மார்க் வாக் கூறுகையில் ‘‘பெங்களூரு டெஸ்டில் இந்தியாவின் செயல்பாடு, புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதற்கு எதிர்மறையாக உள்ளது. அவரது மூளை மங்கிவிட்டது. இரண்டு பீல்டர்களை இடது பக்கம் நிறுத்திய பின், லயனின் பந்து பவுன்சர் ஆவதற்கு முன் கோலியின் பேடை தாக்கும் என்பது எனக்குத் தெரியும்.

அதிக அளவு நோக்கத்துடன் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்று கோலி தனது பார்வையில் இருந்து கூறியிருந்தார். ஆனால், இப்படி விளையாடக்கூடாது என்பது அவர் முக்கியமான காரணமாக இருந்து விட்டார்.

விராட் கோலி எதிர்மறையான எண்ணத்துடன் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் பேட்ஸ்மேனை சுற்றி அதிக அளவில் பீல்டர்கள் உள்ளனர். பந்து பவுன்சர் ஆகினால் பந்து இன்சைடு எட்ஜ் ஆகும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு பேட்ஸ்மேன் இப்படி நினைக்கவே கூடாது. அவரால் அடிக்க முடியும் என்றால், அவனது தூக்கத்தில் கூட பந்து ரன்னாக முடியும்.

விராட் கோலி உண்மையிலேயே கொஞ்சம் நேர்மறையான சிந்தனையுடன் உள்ளார். அது அவரது சக அணி வீரர்களையும் ஒட்டிக்கொண்டது. பெங்களூர் முதல் நாள் ஆட்டத்தில் அவர்கள் வந்ததும் சென்றதுமாகவே இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட்டானது குறித்து அவர்களை நினைத்து பார்த்தால், மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கும்’’ என்றார்.