யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலைக்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கிலும் அசாதாரண காலநிலைகள் காரணமாக பல தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக (டெங்கு, சளிசுரம்-இன்புளூவென்சா வகைக் காய்ச்சல் மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று) தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் இருக்கும் நோயாளரைப் பார்வையிடுவதற்கு வருகைத் தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக கர்ப்பிணிகள் , குழந்தைகள் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிவிடுவார்கள். இதனால் அவசியமற்ற வகையில் இவர்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.