வட,கிழக்கில் 700 இற்கும் அதிகமான தொழில் முயற்சிகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமங்களை அடிப்படையாக கொண்டு ஆயிரத்து 700 இற்கும் அதிகமான தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுதொடர்பாக சமர்ப்பித்துள்ள ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இதற்கு என்று 446 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 113 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் சமூக பொருளாதார மட்டத்தை மேம்படுத்தி பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.