ஜெயலலிதாவுக்கு தவறான மருந்துகள் அளிக்கப்படவில்லை : தமிழக அரசு அறிக்கையில் தகவல்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தவறான மருந்துகள் கொடுக்கப்படவில்வலை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்ட போது அவரை காப்பாற்ற அனைத்து வகையிலும் முயற்சி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை மேற்ககோள் காட்டி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தவறான மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

தவறான மருந்துகள் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உயர் அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு உள்ளிட்டவற்றிற்கு வழக்கமான மருந்துகளையே வாய்வழியாக உட்கொண்டார் என்றும் அந்த அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டபோது அவரை காப்பாற்ற அனைத்து வகையிலும் முயற்சி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.