மருத்துவமனையில் ஜெ அனுமதிக்கப்பட்டபோது அவரால் குரல் அழைப்பை உணர முடியவில்லை.. அப்பல்லோ தகவல்!

மருத்துவமனையில் ஜெ அனுமதிக்கப்பட்டபோது அவரால் யாருடைய குரல் அழைப்பையும் உணர முடியவில்லை என அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேததி காலை ஜெயலலிதா வாந்தி எடுத்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவரால் யாருடைய குரலையும் உணர முடியவில்லை என எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 முதல் 7 நாட்கள் வரை அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதும் அவருடைய ஆக்ஸிஜன் அளவு 98% ஆக அதிகரித்ததாக அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி காலை உணவு உட்கொண்ட ஜெயலலிதா திடீரென வாந்தி எடுத்தார் என அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 4.20 மணிக்கு அவர் டிவி பார்த்தார் என்றும் மாலை 5.30 மணிக்கு அவருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டதாகவும் அப்பல்லோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.