மும்பை தாக்குதலின் மூளை பாகிஸ்தான் தீவிரவாதிகளே : பாக். முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்

மும்பையில் 2008–ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் புகுந்து, கொடூர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதல்களை, நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளே என இந்தியா குற்றம் சாட்டி வந்தது. ஆனால், பாகிஸ்தான் அதை தொடர்ந்து மறுத்து வந்தது.

பாகிஸ்தான் தொடர்ந்து பாகிஸ்தான் மண்ணில் இருந்து மும்பை பயங்கரவாத தாக்குதல் நடத்தவில்லை என்று கூறிவரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமத் அலி துர்ரானி மும்பையில் தாக்குதல் நடத்தியது

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளே என கூறிஉள்ளார். மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த முகமத் அலி துர்ரானி டெல்லியில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுவால் முன்னெடுக்கப்பட்டது, எல்லைத் தாண்டிய ஒரு பயங்கரவாத தாக்குதல் என கூறியுள்ளார்.