பாகிஸ்தான் சூப்பர் லீக்: பெஷாவர் அணி சாம்பியன்

பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் பெஷாவர் சல்மி – குயிட்டா கிளேடியேட்டர்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய டேரன் சமி தலைமையிலான பெஷாவர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. கமரன் அக்மல் 40 ரன்னும், டாரன் சேமி 11 பந்தில் 28 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய சர்பிராஸ் அகமது தலைமையிலான குயிட்டா கிளேடியேட்டர்ஸ் அணி 16.3 ஓவர்களில் 90 ரன்னில் சுருண்டது. இதனால் பெஷாவர் அணி 58 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.