மீண்டும் அமைச்சர்களுக்கு அடித்த அதிஸ்டம்!

காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதேநேரம், மத்திய வங்கியின் முறிவிநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை குறித்த சட்ட மா அதிபரின் ஆய்வுக் கடிதமும், சபாநாயகரினால் இன்று சபைப்படுத்தப்பட்டது.

இந்த கடிதத்தில், முறிவிநியோகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளவர்களால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தால்,அந்த நட்டத்தொகையை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 54 கோடி ரூபாவை ஒதுக்குவதற்கான முற்கூட்டி வரைவுகள் இரண்டு, இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

7 அமைச்சர்களுக்கும், 3 ராஜாங்க அமைச்சர்களுக்கும், பிரதி அமைச்சர்கள் இருவருக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு 53 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.