சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த இந்துசமுத்திர வலயத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வேளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பலர் கடல் வழி பாதையை பயன்படுத்தியே போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கின்றனர்.
இதற்கமைய, ஒவ்வொரு நாட்டின் அதிகாரத்திற்கு வெளியே சர்வதேச கடல் பரப்பில் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்த உரிய முறையொன்று இல்லாமல் போனது பாரிய பிரச்சினை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் இந்து சமுத்திரத்திலுள்ள நாடுகள் விரைவில் அவதானம் செலுத்தி இந்த வர்த்தகத்தை தடை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.