விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது 47ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடியுள்ளார்.
பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி உட்பட குடும்பத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
கடந்த ஆட்சிக்காலத்தின் போது அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச அரச வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.