இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு செயல்அமர்வை ஒத்திவைக்குமாறு வட மாகாண முதலமைச்சரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சிலர் உறுப்பினர்களின் ஆதரவும் சிலரின் எதிர்ப்பும் இருந்த போதும் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சிறப்பு அமர்வு இன்று நடைப்பெற்றது.
சிறப்பு அமர்வை ஒத்தி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த முதலாவது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இரண்டாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாகாண குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடத்துவதற்கு கடந்த மாதம் சிறப்பு அமர்வொன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்த அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கேட்டிருந்தார். எனினும் அன்றைய தினம் முதலமைச்சருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.
இந்த அமர்வை நடத்துவதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளதாகவும் கூறியிருந்தார். அந்த விடயம் சபை நடவடிக்கை குழுவில் ஆராயப்பட்டதற்கு இணங்க சிறப்பு அமர்வை ஒத்திவைக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் திட்டமிட்டபடி சிறப்பு அமர்வு இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.