இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி சில நாடுகளின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்த மாநாட்டில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஹமீத் அன்சாரி சிறிசேனாவை சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீனவர் கொலை சம்பவம் மீண்டும் நிகழாது என உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மரணமான மீனவரின் குடும்பத்துக்கு நட்டஈடாக 5 இலட்சம் ரூபாவும், காயமடைந்த மீனவருக்கு ஒரு லட்சம் ரூபாவும் வழங்குவதற்கு தமிழக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.