ஆடை மாற்றும் அறைக்கதவை மூடக்கூடாது: கொதித்தெழுந்த கல்லூரி மாணவிகள்!

கேரளாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் தங்கி பயின்றி வரும் விடுதி மாணவிகள் ஆடை மாற்றும் அறை கதவுகளை மூடக்கூடாது என அக்கல்லூரியின் முதல்வர் கூறியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்லம் மாவட்டதில் பிரபல தொழிலதிபர் ரவி பிள்ளை என்பவரால் உப்பாசனா மருத்துவ கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது.

இக்கல்லூரி முதல்வராக ஜெசிகுட்டி என்பவர் இருந்து வருகிறார். இவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு கடுமையான சட்டங்களை பின்பற்றுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

அதாவது விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் ஆடைகள் மாற்றும் போது அறைக்கதவை மூடக்கூடாது.

ஏனெனில் அறையை மூடிக்கொண்டு மாணவிகள் கைப்பேசியை பயன்படுத்தி விடுவார்கள், அதனால் அறைக்கதவை மூடக்கூடாது என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தேவையற்ற முறையில் அபராதங்களை விதித்துள்ளார். நகம் வளர்த்தால், அளவுக்கு அதிகமாக முடி வளர்த்தால் கூட அபராதம் கட்ட வேண்டும்.

மேலும், நூலகத்தில் மட்டும் இணையதள வசதி உள்ள கணனியை எங்களின் பாடத்தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தோம்.

ஆனால், அவற்றை நிறத்தம் செய்துவிட்டார். தேவையில்லாமல் மாணவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.