ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் இதற்குக் காரணம் நாம் செய்த பாவங்களே. இந்தப் பிறவியில் நாம் செய்த பாவங்களை ஓரளவுக்கு கணக்கிட்டு விட முடியும்.
ஆனால் போன பிறவிகளில் என்னென்ன பாவம் செய்தோம்? அவை எவ்வளவு என யாராலும் கணக்கிட முடியாது. தவறாமல் அவை நமக்குத் துன்பங்ககளைத் தந்து கொண்டுதான் இருக்கும்.
அப்படிப்பட்ட போன பிறவிப் பாவங்களையும் சேர்த்தே அழித்து, நமக்கு உயர்வை அளிக்கக் கூடியது புரட்டாசி மாதத் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி.
இதற்குச் சான்று அரிச்சந்திரன். ராஜ்ஜியம் இழந்து மனைவியையும் மகனையும் விலைக்கு விற்று, தானும் அடிமையாக இருந்து சுடுகாட்டைக் காவல் காத்தான் அரிச்சந்திரன்.
இவ்வளவுக்கும் காரணம் அவனது முன் வினையே. அரிச்சந்திரனின் துயரத்தை அறிந்த கௌதம முனிவர் “அரிச்சந்திரா புரட்டாசி மாதத் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி அன்று நீ இருந்து வழிபாடு செய். உன் துயரங்கள் எல்லாம் நீங்கும்” என்று உபதேசம் செய்தார் அதை அப்படியே செய்து அரிச்சந்திரன் உயர்வு பெற்றார்.