ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு ரகசிய தொடர்பு உள்ளதா என மாஜி அமைச்சர் பொன்னையன் விளாசியுள்ளார். ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே கருப்பு பூனை படையை அகற்றிவிட்டு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணைக் கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஓபிஎஸ் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சசிகலா தரப்பை வெளுத்து வாங்கினார்.
ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே கருப்பு பூனை படையை திரும்ப பெற்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே கருப்பு பூனை படையை அகற்றிவிட்டு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுடன் காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆலோசித்ததாக சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பொய் சொல்கிறார் என்றும் பொன்னையன் குற்றம்சாட்டினார். மேலும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களுடன் அப்பல்லோவுக்கு ரகசிய தொடர்பு உள்ளதா என்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கேள்வி எழுப்பியுள்ளார்.