கவுரமிக்க போட்டிகளில் ஒன்றான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல்சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 21-11 என்ற நேர் செட்டில் மேட்டி போல்செனை (டென்மார்க்) 29 நிமிடங்களில் விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிந்து அடுத்து டினார் யா அயூஸ்டினை (இந்தோனேஷியா) எதிர்கொள்ள இருக்கிறார்.
ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 19-21, 13-21 என்ற நேர் செட்டில் ஹூயாங் யுசியாங்கிடம் (சீனா) பணிந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய் 17-21, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் குயாவ் பின்னை (சீனா) வீழ்த்தி முதல் தடையை வெற்றிகரமாக கடந்தார்.