மிஸ் யு அஞ்சு….. டுவிட்டரில் கணியும் ஜெய்

ஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல  வரவேற்பை பெற்றதோடு, அந்த நேரத்தில் ஜெய்-அஞ்சலி இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பின்னர் சினிஷ் இயக்கும் `பலூன்’ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்த  படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது. மேலும் பல பிரச்சனைகளை தாண்டி இப்படத்தில் அஞ்சலி ரீஎன்ட்ரி  ஆகியிருக்கிறார். இப்படத்திலும் ஜெய்-அஞ்சலி இணைந்து நடத்திருப்பதால் அவர்களை வைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த  வண்ணமே உள்ளன. அதற்கு ஏற்றாற்போல் இருவரும் இணைந்து செயல்படுகின்றனர். குறிப்பாக தோசை சேலன்ஜ் போட்டியில்  ஜெய் பங்கேற்றார். அதேபோல் அஞ்சலியும் தனது டுவிட்டர் பக்கத்தில் மனதிற்கு பிடித்தவரை தான் சந்தித்து விட்டதாகவும்,  கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவலை வெளியிடுவேன் என்றும் பகிர்ந்திருந்தார்.

ஜெய்யும் அதனை முன்மொழிவது போல தனது கருத்துக்களை தெரிவித்து வருவதால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக  கோலிவுட் வட்டாரங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், `பலூன்’ படத்தில் அஞ்சலியின் பாகங்கள் அனைத்தும் படமாக்கப்பட்டுள் நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில்  அஞ்சலி, “பலூன் படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்ததாகவும், கடைசி நாள் படப்பிடிப்பு ரொம்பவும் அருமையாக  அமைந்ததாகவும் படக்குழுவை தான் மிஸ் பண்ணுவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் டுவிட் போட்டுள்ள ஜெய், “படப்பிடிப்பு தளத்தில் நானும், படக்குழுவும் உன்னை மிஸ் பண்ணுகிறோம் அஞ்சு….” என்று  கணிந்துள்ளார்.

ஜெய்யின் டுவிட்டுக்கு பதில் அளித்த அஞ்சலி, “நாம் மீண்டும் இணையும் தருவாயில் பல நியாபகங்கள் நம்மை  மகிழ்ச்சிப்படுத்தும், `பலூன்’ படத்தை திரையில் காண ஆவலோடு காத்திருப்பதாகவும்” அஞ்சலி தனது அன்பை  வெளிப்படுத்தியுள்ளார்.