விஜய் தற்போது தனது 61-வது படமாக அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது.
தலைப்பு வைக்கப்படாமலேயே படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதில் 80-களில் உள்ளது போல சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிக்காக விஜய் முறுக்கு மீசையுடன் வரும் விஜய், ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இதில் விஜய் அப்பாவாகவும் இரண்டு மகன்களாகவும் 3 வேடங்களில் நடிக்கிறார். இவர்களில் அப்பா விஜய்யின் ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார்.