பாலாவை தொடர்ந்து மற்றொரு தேசிய விருது இயக்குநருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகராக தற்போது வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் கைவசம் பல படங்கள்  இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

அவரது நடிப்பில் தொடர்ந்து தள்ளிப்போகும் `புரூஸ் லீ’ படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், அவர்  `ஐங்கரன்’, `4ஜி’, `அடங்காதே’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதே நேரத்தில் தேசிய விருது இயக்குநர் பாலா  இயக்கத்தில் ஜோதிவுடன் இணைந்து `நாச்சியார்’ என்ற மாறுபட்ட கதைகளத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் ராஜுவ் மேனனின் சர்வம் தாள மயம், சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன்  இயக்கத்தில் மற்றொரு படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

இந்நிலையில், மற்றுமொரு தேசிய விருது இயக்குநரான பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் தயாரிப்பில் `செம’ என்ற புதிய  படத்திலும் ஜ.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளரான வள்ளிகாந்த் இயக்குகிறார். வள்ளிகாந்த் தன் நண்பர் ஒருவர் திருமணம்  செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக சொல்ல, கதையை ரசித்த பாண்டிராஜ் பசங்க  புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அவரின் நண்பர் பி.ரவிச்சந்திரனின் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்க முடிவு  செய்தார். மேலும் இப்படத்திற்கு வசனமும் எழுதுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிப்பதோடு இசையமைத்திருக்கிறார். அர்த்தனா விஜயகுமார் கதாநாயகியாக  அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.