சத்து நிறைந்த சோயாபீன்ஸ் மசாலா சுண்டல்

தேவையான பொருட்கள் :

வெள்ளை சோயா பீன்ஸ் – ஒரு கப்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, புதினா – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

* சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைக்கவும்.  மறுநாள் குக்கரில் வேக வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து… கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

* சோயாபீன்சில் மசாலா நன்கு கலந்து தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!