குழந்தைகளுக்கு சத்தான கோதுமை வாழைப்பழ அடை

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 200 கிராம்
வாழைப் பழம் – 2
தேங்காய் – 2 துண்டு
ஏலக்காய் – 2
வெல்லம் – 200 கிராம்
நெய் – தேவையான அளவு
முந்திரி – 5

செய்முறை :

* வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும்.

* தேங்காய், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மசித்த வாழைப் பழம், தேங்காய், முந்திரி, ஏலக்காய்த் தூள், பொடித்த வெல்லம் சேர்த்து, தண்ணீர் விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைத்து கொள்ளவும்.

* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சிறிய அடைகளாக வார்த்து, நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

* சூப்பரான கோதுமை வாழைப்பழ அடை ரெடி.

* இனிப்புச் சுவை இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரதம், பொட்டாசியம், மாவுச் சத்துக்கள் இருப்பதால், அனைவரும் சாப்பிடலாம்.