கூட்டு எதிர்க்கட்சி நாடு முழுவதிலும் போராட்டங்களை நடாத்தத் தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்வரும் 20ம் திகதி முதல் நாடு முழுவதிலும் இவ்வாறு போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இந்தப் போராட்டங்கள் தேசிய மாவட்ட மற்றும் மாகாண அடிப்படையில் நடத்தி பின்னர் தேசிய ரீதியில் பாரிய போராட்டமாக நடத்தப்படவுள்ளது.
முதல் கட்ட போராட்டம் எதிர்வரும் 20ம் திகதி உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சிற்கு எதிரில் நடத்தப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.