படித்த முதல்வரை விட 8 ஆம் வகுப்பு கற்ற வடமேல் மாகாண முதல்வரின் நிர்வாகம் சிறந்தது…!

நாட்டில் உள்ள மாகாணங்களின் உள்ள கல்வி கூடிய முதலமைச்சர்களை விட 8 ஆம் வகுப்பு கற்ற வடமேல் மாகாண முதலமைச்சரின் நிர்வாகம் சிறந்ததாக இருக்கின்றது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கூறியுள்ளார்.

மாகாணசபையில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் இருக்கின்றன.

அந்ததந்த மாகாணங்களின் முதலமைச்சர்களுடன் ஒப்பிடுகின்றபோது கல்வித் தரம் அதிகமாக இருக்கின்ற முதலமைச்சர் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், கல்வித் தரத்துடன் ஆளுமையும் இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறானதொரு நிலையில், வடமேல் மாகாண முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறேன்.

அவர் தரம் எட்டு வரையுமே கற்றிருக்கின்றார். ஆனால், அவர் தனது நிர்வாகத்தை சிறந்தமுறையில் நடத்தி வருகின்றார். அதற்கான ஆளுமை அவரிடம் இருக்கிறது.

ஆகவே, நிர்வாகத்தை சிறந்த முறையில் நடத்துவதற்கு அறிவுடன் கூடிய ஆளுமை அவசியம் என தெரிவித்திருந்தார்.