இலங்கை நாடாளுமன்றுக்குள் சிக்கிய தங்கப் பந்து!

நாடாளுமன்ற கழிப்பறையில் விழுந்து கிடந்த நிலையில் தங்க பந்து ஒன்றை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு மீட்ட தங்க பந்தை நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.

எப்படியிருப்பினும் இதுவரையில் அந்த தங்க பந்துக்கான உரிமையாளர் யார் என தெரியவரவில்லை.

தங்க பந்து தொடர்பில் தற்போது வரையில் நாடாளுமன்றத்தினுள் பலவித கருத்துக்கள் நிலவி வருகின்றன.