யாழ்.நல்லூரில் ஜேர்மன் தம்பதிகள் : அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த தருணம்…!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு ஜேர்மன் நாட்டு தம்பதிகள் வருகை தந்திருந்த விதமானது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு குறித்த ஜேர்மன் நாட்டு தம்பதிகள் இந்து கலாச்சார உடையில் வருகை தந்திருந்தமை அங்கிருந்த மக்களிடையே சிறப்பாக பேசப்பட்டது.

கடந்த திருவிழா காலங்களில் பல வெளிநாட்டவர்கள் கலாச்சார உடையில் வருகை தந்து அனைவருடைய மனங்களையும் கவர்ந்திருந்தனர்.

அந்த வகையில் இன்று கந்தசுவாமி அலையத்துக்கு வருகை தந்திருந்த குறித்த தம்பதியினர், நல்லூரானின் சிறப்பு பற்றி தங்களிடம் விசாரித்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் இலங்கைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணமே உள்ளனர்.

அந்த வகையில் கடந்த வருடம் இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்ததற்கான பதிவுகள் உள்ளன.

மேலும் கடந்த காலங்களில் உள்ளூரிலிருந்து வருகை தருபவர்களே கலாச்சார உடையில் வரவில்லை என தெரிவித்து கோவிலுக்குள் செல்லும் அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோவில்களில் ஆடை பின்பற்றும் முறையும், அறிவித்தல் பலகைகளும் காணப்படுகின்றது.

இது உள்ளூரிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த தம்பதியினர் கலாச்சார உடையில் வந்திருந்தமை சிறப்பாகப் பார்க்கப்படுகின்றது