ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல் கேப்டன்

10-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி மே 21-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்து உள்ளது.

கடந்த ஐ.பி.எல். தொடரின் போது பஞ்சாப் அணிக்கு தென்ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் கேப்டனாக இருந்தார். போட்டி தொடரின் நடுவில் டேவிட் மில்லருக்கு பதில் முரளிவிஜய் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.