சித்தி சசிகலாவுக்கும் சித்தப்பா நடராஜனுக்கும் 27 வருஷமா தொடர்பே இல்லையே – டிடிவி தினகரன் ஒரேபோடு!=

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் அவரது கணவர் நடராஜனுக்கும் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த தொடர்பும் இல்லை என்று துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், நடராஜன் கூறும் கருத்துக்களை அதிமுகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

நடராஜன் 1990க்குபிறகு போயஸ்கார்டன் வீடு பக்கமே வரவில்லை என்றும் சின்னம்மா சசிகலா உடன் அவர் எந்த தொடர்பிலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதிமுக விவகாரம் பற்றி வெங்கைய நாயடு நடராஜன் பேச்சு பொங்கல் விழாவில் பேசிய நடராஜன், தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துவோம் என்று பகிரங்கமாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. விமர்சனத்தையும் உருவாக்கியது.

டிடிவி தினகரன் டிடிவி தினகரன் அதிமுகவில் மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஓரம்கட்டிவிட்டு ஒன்மேன் ஷோ நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். மாமா திவாகரன், அவரது மகன்கள், சித்தப்பா நடராஜன் அவரது சகோதரர்கள், பங்காளிகளை புறக்கணித்து வருகிறார்.

அதிமுக கருத்து அல்ல அதிமுக கருத்து அல்ல தந்தி டிவியில் நடராஜன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், தஞ்சாவூரில் நடராஜன் பேசிய கருத்துக்களை அதிமுகவின் கருத்தாக ஏற்க முடியாது என்றார். அவர் சகிகலாவின் கணவர்தானே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அடுத்த பதிலை கூறினார். தொடர்பில் இல்லை தொடர்பில் இல்லை நடராஜன் போயஸ்கார்டன் வீட்டில் வசிக்கவில்லை. 1990களுக்குப் பிறகு போயஸ்கார்டன் வீட்டுப்பக்கமே நடராஜன் வரவில்லை. சின்னம்மா சசிகலா உடன் நடராஜன் கடந்த 27 ஆண்டுகளாக எந்த தொடர்பிலும் இல்லை என்று கூறினார்.

அப்போ அது யார்? அப்போ அது யார்? சசிகலாவிற்கும் நடராஜனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறினாலும் ஜெயலலிதா மரணமடைந்த உடன் டிசம்பர் 6ஆம் தேதி அவரது உடல் அருகே நின்று கொண்டிருந்தது யார்? பெங்களூரு சிறைக்குள் சசிகலா செல்லும் முன்பு நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுததாக தகவல் வெளியானதே அதெல்லாம் பொய்யா? என்று அதிமுகவினர் கேட்கின்றனர்.