சிங்கப்பூரில் ரணில் – மஹிந்த இரகசிய சந்திப்பு! உறுதி செய்தது புலனாய்வு பிரிவு!!

கடந்த மாத இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக சிங்கப்பூர் பயணமாகியிருந்தார்.

இதன்போது கிரான்ட் ஹைட் ஹோட்டலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மஹிந்த கலந்துரையாடல் மேற்கொண்ட சம்பவம் தற்போது உறுதியாகியுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் இதனை உறுதி செய்துள்ளனர்.

இரகசியமாக சந்தித்தமை தொடர்பில் தகவல் வெளியாகியதனை தொடர்ந்து தான் ஒரு போதும் ரணிலை ஹோட்டல்களில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை எனவும், சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் உணவு அறையில் சாகலவை மாத்திரம் சந்தித்ததாக மஹிந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச மிகவும் இரகசியமான முறையில் சிங்கப்பூர் சென்ற சிலையில், அன்றைய தினம் மாலை தனக்கு மிகவும் நெருக்கமான உறுப்பினர்கள் குழுவுடனும், கட்சி தலைவர்களுடனும் சந்திப்பொன்றை நடத்தி விட்டே மஹிந்த சென்றுள்ளார்.

எனினும் அந்த கட்சி தலைவர்களுக்கு மஹிந்த வெளிநாடு செல்வது குறித்து அறிவிக்கப்படவில்லை. சிங்கப்பூரில் மஹிந்த – ரணிலின் இரசிய சிங்கப்பூர் சந்திப்பின் பின்னரே அமைச்சரவை திருத்தம், சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் சர்ச்சைக்குரிய முறி மோசடியில் மஹிந்தவின் கையொப்பம் ஆகிய விடயங்கள் வெளியே வந்தன. எனினும் மஹிந்த இவற்றிற்கு எதிர் தாக்குதல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளவில்லை.

மஹிந்தவின் கையொப்பம் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் 10 நாட்கள் கடக்கும் வகையில் மஹிந்தவின் கட்சியினர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடேனும் செய்யாத விடயம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய வங்கி முறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அர்ஜுன் எலோசியஸ், நாமல் ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.