அரசமரத்தைப் பற்றி பிரம்மா, நாரதருக்கு உபதேசித்த விஷயங்கள் பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளன. அரசமரத்தின் தெற்கு பக்க கிளையில் ருத்ரனும், மேற்கு கிளையில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், கிழக்கில் தேவர்களும் வாசம் புரிகின்றனர்.
அதனால், அரசமரத்தை வலம் வந்தால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.
* அரசமரத்தை வலம் வரும்போது சரியான இடைவெளி விட்டு மெதுவாக நடக்க வேண்டும். வேகமாக நடக்கக்கூடாது.
* இரு கரம் கூப்பி வணங்கியபடியே வலம் வருவது நல்லது.
* உடன் வருபவருடன் பேசியபடி நடக்கக் கூடாது. பதிலாக இறைவனின் துதி பாடலைப் பாடியபடி சுற்றி வரலாம்.
* அரச மரத்தை வலம் வருபவர்கள் குறைந்தபட்சம் 7 முறையும், அதிகபட்சமாக 108 முறை வலம் வர வேண்டும்.
* சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.
* அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம் வருவதை தவிர்த்து விடுங்கள்.
* ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால், கடன் தொல்லை நீங்கும். பய உணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.