ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பளிக்கும் நாடு என்ற பெருமை ஐஸ்லாந்துக்கு இருந்தாலும், அந்நாட்டில் ஆண்களை விட பெண்களின் ஊதியம் 14-18% குறைவாகவே உள்ளது. இதனால் ஆண்களுக்கு நிகராக வேலை செய்யும் தங்களுக்கு ஆண்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று பெண்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க ஐஸ்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
25 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும், வரும் 2020-ம் ஆண்டிற்குள் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.