அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைப்பது சந்தேகம்: சொல்கிறார் பிரேமலதா!

அதிமுகவுக்க இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம் என தேமுதிக தலைவர் விஜகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். வாக்குக்கு பணம் கொடுப்பதை இளைஞர்கள் தடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்று அவர் கூறினார்.

இதனால் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்றும பிரேமலதா விஜயகாந்ர் தெரிவித்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலையும் சந்திக்க தே.மு.தி.க. தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம் என்றும் அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல தேர்தல்களிலும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். வாக்குக்கு பணம் கொடுப்பதை இளைஞர்கள் தடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் இடைத்தேர்தல் என்பது எடைத் தேர்தலாக பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.