ஓபிஎஸ் அணியின் ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஓபிஎஸ், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என்று மூன்றாக அதிமுக பிளவுபட்டுள்ளது.
அண்மையில் சசிகலா அதிமுகவின் ஆட்சி மன்ற குழு தலைவராக சிறையில் இருக்கும் சசிகலாவை நியமிப்பதாக துணைப் பொதுச்செயலர் தினகாரன் அறிவித்தார். ஆட்சிக் மன்றக் குழுவின் உறுப்பினர்களாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனனை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் ஆட்சிக் மன்றக் குழுவின் உறுப்பினர்களாக ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, பாண்டியராஜன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாணிக்கம், நீலங்கரை எம்.சி முனுசாமி, கோபாலகிருஷ்ணன், மருதராஜ், ஜெயசிங், செங்குட்டுவன், ஷேக் அயூப் ஆகிய 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சி மன்ற குழு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி தரப்பில் போட்டியிடும் வேட்பாளராக யாரை நிறுத்துவது என முடிவு செய்யும்.