பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ள தாதி உத்தியோகத்தர் சங்கம்!

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் சேவை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை இவர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக கொடுப்பனவு மற்றும் வேதன கொடுப்பனவு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த சேவை புறக்கணிப்புக்கு அரச தாதிமார் சங்கம் ஆதரவு வழங்க போவதில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.