அதிமுக அரசியல்வாதிகளுக்கு திடீர் வியாதி வந்துள்ளது. அது ஜெயலலிதா சமாதியில் போய் ஓங்கி அடிப்பது, ராத்திரி ராத்திரி போய் தியானம் செய்வது. முன்பு ஓ.பி.எஸ். தியானம் செய்தார். அந்த வரிசையில் இன்று தீபா தியானம் செய்துள்ளார்.
எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டு வந்த ஓ.பி.எஸ். திடீரென ஒரு நாள் சசிகலாவுக்கு எதிராக வெகுண்டெழுந்தார். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் போய் தியானத்தில் அமர்ந்தார். தியானம் கலைந்து எழுந்து வந்த அவர் பரபரப்பு பேட்டி கொடுத்தார். அதிமுகவை உடைத்தார்.
அன்று தொடங்கிய பிரளயத்தால் தமிழ்நாடு பல நாட்களுக்கு தூக்கம் தொலைத்தது. இந்த நிலையில் இன்று திடீரென தீபாவும் போய் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்தார். அவரது கணவருடன் போய் தியானம் செய்த அவரால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
இப்படித்தான் முன்பு சசிகலா, ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு சமாதிக்கு விசிட் அடித்து ஓங்கி ஓங்கி 3 முறை சமாதியில் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ் தீபா போன்றோர் இரவில் சமாதிக்குப் போகிறார்கள்.
இப்படி அதிமுக தரப்பினரைப் பிடித்துள்ள இந்த தியான வியாதி எப்போது தீரும் என்று தெரியவில்லை. அடுத்து யார் தியானம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை