தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும்..கமல்ஹாசன்

தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தலைவர்களை மக்கள் தேர்வு செய்து கொள்ளட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த கமல்ஹாசன், தமிழக அரசியல் பற்றி தனது நிலைப்பாட்டினை பரிந்து கொண்டார். அப்போது அவர், சாதி அவசியமில்லை என்றும் சாதியை எடுத்துவிடுவதுதான் தனது கொள்கை என்றும் கூறினார்.

சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் மட்டுமே தான் கம்யூனிஸ்ட் ஆகிவிட முடியாது என்றும் கூறினார். தமிழகத்தில் தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆட்கள் வேண்டும் என்றார்.

ஆட்சி தொடர வேண்டுமா?
தமிழகத்தில் மேலும் 4 ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார். நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன் என்றும் கூறினார். சட்டத்தைக் காரணம் காட்டி கட்டாய திருமணம் போல 4 ஆண்டுகள் ஏன் ஆட்சியைத் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

புதிய தலைவர் தேவை
புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்யவேண்டும் என்றும் கமல் தெரிவித்தார். நான் அரசியலில் என்றும் அரசியல் பேசினால் மட்டுமே அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் என்றும் கமல் தெரிவித்தார். எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டும் என்றும் பிரதமரும், முதல்வரும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கருவி போன்றவர்கள் என்றும் கமல் தெரிவித்தார்.

நாட்டை விட்டு போகிறேன்

எனது விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்களால் பிரச்சினை வரவில்லை. அப்போது இருந்து ஆட்சியாளர்கள்தான் பிரச்சினைக்குக் காரணம். எனது படத்திற்கு வந்த பிரச்சினைக்கு அரசியல்தான் காரணம். விஸ்வரூபம் படத்திற்கும், விரும்மாண்டி படத்திற்கும் அரசியல் கட்சிகளால்தான் பிரச்சினை வந்தது என்றும் அதனால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்றும் கூறினார். இந்த போராட்டத்தில் தான் தோற்றுப்போனது உண்மைதான் என்றார். அப்போது தான் நாட்டை விட்டுப்போவதாக தெரிவித்தேன் என்றும் கமல் கூறினார்.

பகுத்தறிவுவாதி
தான் பகுத்தறிவுவாதிதான் என்றும் பல ஆண்டுகளாக நாத்திகம் பேசி வருவதாகவும் கூறினார் கமல் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான் என்றும் தெரிவித்தார்.

நான் குரல் கொடுப்பேன்
நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். வாக்குகளுக்கு விலைபோகும் போது கேள்வி கேட்க முடியாது என்றும் கமல் தெரிவித்தார். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வெறும் கலைஞனாக மட்டுமே தன்னால் இருக்கமுடியாது என்றும் கூறினார்.