நான் நாட்டை விட்டு போனால் உங்களுக்கு அவமானம் இல்லையா என நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக கேட்டுள்ளார். சண்டியர் பட தலைப்புக்கு பிரச்சனை கொடுத்ததும் அரசியல்தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தொடர்ந்து சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். இதையடுத்த நாட்டை விட்டு போகிறேன் என்றவர் நாட்டு பிரச்சனை குறித்து பேசுகிறார் என அதிமுக தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நெறியாளரின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தர்.
உங்களுக்கு அவமானம் இல்லையா?
அப்போது, நாட்டு நடப்பு குறித்து பேசினால், நாட்டை விட்டு போகிறேன் என்று சொன்னவர் நாட்டின் பிரச்சனை குறித்து பேசுகிறார் என்கின்றனர். நாட்டை விட்டு நான் வெளியேறினால் அது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா?
சண்டியர் பட பிரச்சனைக்கு காரணம்
இங்கு இருப்பது போல் இடைஞ்சல்களும் பிரச்சனைகளும் இல்லாத ஒரு நாட்டிற்குதான் செல்வதாக நான் கூறியிருந்தேன். சண்டியர் பட தலைப்புக்கு வந்த பிரச்சனையும் அரசியல் காரணமாகத்தான்.
விஸ்வரூபம் – அரசியலே காரணம்
விஸ்வரூபம் படத்திற்கு வந்த பிரச்சனைகள் எல்லோருக்கும் தெரியும். அதன் பின் அரசியலை தவிர வேறு ஏதும் காரணமல்ல.
இஸ்லாமியர்கள் அல்ல
இஸ்லாமியர்கள் அந்தப் பிரச்சனைக்கு காரணமல்ல. எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கின்றனர். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பேசினார்.
நாட்டை விட்ட வெளியேறுவேன்
கடந்த 2013ஆம் ஆண்டு விஸ்வரூபம் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். அதனை வைத்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.