கருணாநிதி மகள் கனிமொழி அதிரடி கைது!

சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ரேசன் கடைகளில் உள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு சரியாக வழங்கபடாததை கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம் நடைப்பெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் நடந்த போரட்டத்தில் கருணாந்தியின் மகளும், திமுகவின் எம்.பியுமான கனிமொழி கலந்து கொண்டார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அவரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் கனிமொழி கூறுகையில், டாஸ்மாக் இணையதளத்தில் மதுவகைகள் குறித்த பட்டியல்தான் இருக்கிறது என்றும், இருப்பு உள்ள ரேஷன் பொருள்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதே போல திருவான்மயூரில் நடந்த போரட்டத்தில் நடிகரும், எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.