சுமித் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஆச்சரியம் அளித்தது: பிளிஸ்சிஸ்

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், டி.ஆர்.எஸ். முறையை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில், யார் மீதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஆச்சரியம் அளித்தது.

இவற்றுடன் ஒப்பிடும் போது, ஆஸ்திரேலியாவில் என் மீது கூறப்பட்ட (பந்தை சேதப்படுத்தியதாக போட்டி கட்டணம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது) புகார் மிகச்சிறியதே.

ஆனாலும் அப்போது என் மீது ஐ.சி.சி. கடுமையான நடவடிக்கை எடுத்தது. அதே போன்ற புகார் தான் இதுவும். இவற்றை ஐ.சி.சி. வேறு விதமாக கையாண்டு இருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது.

இவ்வாறு பிளிஸ்சிஸ் கூறினார்.