பலாலி விமான நிலையத்துக்காக அரசால் சுவீகரிக்கப்பட்ட 956 ஏக்கர் காணி உரிமையானர்களை இனங்கண்டு அவர்களுக்கான இழப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் 1952ம் மற்றும் 1983 ஆம் ஆண்டு தங்களது காணிகளை இழந்த காணி உரிமையாளர்கள் உனடியாக காணி அமைந்துள்ள கிராம அலுவலர்களிடம் தங்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளார்கள்.
கடந்த மாதம், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பலாலியில் நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணிகள் சுவீகரிக்கப்படும் பொழுது அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
காணிகளின் உரிமையாளர்களை இனம் கண்டு அவர்களைச் சொந்த நிலத்துக்கு அழைத்துச் சென்று காண்பிக்கப்பட்டு அவர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவை வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.