அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வரும் விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம், தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வேதனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி நேற்றும் இன்றும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காலி-கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலை என்பவற்றில் மாத்திரம் இந்த போராட்டம் குறிப்பிடதக்களவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் சுமூகமாக இயங்கியதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.