எட்காவின் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் மாத இறுதியில்!!

இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறும் என்று அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.

எனினும் இதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையான எட்கா குறித்து ஏற்கனவே மூன்று தடவைகள் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதியை ஒதுக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாகவும், எனினும் அதற்கு இந்தியத் தரப்பிலிருந்து இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் பெரும்பாலும் இந்த மாத இறுதியில் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த உத்தேசித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.