பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிகாரித்து வரும் எலிகளை கட்டுபபடுத்த அந்நகரின் மேயர் அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரபல பத்திரக்கைக்கு பேட்டியளித்த பாரிஸ் மேயர் ஹிடால்கோ கூறியதாவது,
தலைநகரில் உள்ள எலிகளை பிடிக்க பயன்படுத்தப்படும் புதிய பொறிகளை வாங்க நகர நிர்வாகம் 1.6 மில்லியன் டாலர்கள்(இலங்கை மதிப்பில் 24 கோடி) செலவிடும் என்று அறிவித்துள்ளார்.
எலிகளுக்கு எதிரான பாரிஸ் நகர நிர்வாகத்தின் அதிரடியின் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் மாதம் தலைநகரில் உள்ள சில பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொது இடங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயிலில் சிகரெட் சம்பல் தட்டும் ஆஷ்ட்ரேக்கள் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸில் சராசரியாக சுமார் 150 டன்னுக்கும் அதிகமான சிகரெட் துண்டுகளை எடுக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.