சசிகலா விடுதலையாகியிருப்பார்: அகோரி மந்திரவாதியின் பரபரப்பு வாக்குமூலம்

நான் நடத்திய அகோரி பூஜை மட்டும் வெற்றி பெற்றிருந்தால் சசிகலாவை சிறையில் இருந்து விடுதலை செய்திருப்பேன் என மந்திரவாதி கார்த்திகேயன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெரம்பலூரை சேர்ந்த மந்திரவாதி கேரளாவில் இருந்து இறந்துபோன கன்னிப்பெண்களின் உடல்களை வரவழைத்து அகோரி பூஜை நடத்தியுள்ளான்.

இந்நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டதையடுத்து கார்த்தைகேயன் அளித்துள்ள வாக்குமூலத்தில், அதீத சக்தி பெற பூஜைக்கு இளம்பெண் சடலம் வேண்டும் என்றதும் சிஷ்யர்கள் தீயாய் வேலை செய்து சென்னையில் இறந்துபோன அபிராமியின் உடலை கொண்டு வந்து சேர்த்தனர்.

என் மந்திர சக்தியால் பெண்களை வசியம் செய்து உல்லாசம் அனுபவித்து வந்தேன். அதற்காக, கடல் குதிரைகளை தினமும் உட்கொள்வேன்.

என்னிடம் அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் ஆசி பெற்றுள்ளனர். அபிராமியின் சடலத்தின் மீது அமர்ந்து, நள்ளிரவுகளில் நடத்திய அகோரி பூஜை வெற்றிகரமாக நிறைவு பெற்று இருந்தால், இந்த உலகத்தை ஆட்டி படைக்கும் பெரும் சக்தியாக உருவெடுத்து இருப்பேன்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை பூஜை மூலம் வெளியே கொண்டு வந்து இருப்பேன். சிறையிலும் பூஜை செய்து என் மந்திர சக்தியால் வெளியே வருவேன் என கூறியுள்ளார்.