ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இத்தனை நாட்களாக நெற்றியில் பொட்டு வைக்காமல் திடீரென வைத்திருப்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்னும் அமைப்பை சமீபத்தில் தொடங்கினார்.
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
தீபா தன் நெற்றியில் இதுவரை பொட்டு வைத்ததில்லை. கிறிஸ்துவரை திருமணம் செய்துள்ளதால் தான் தன் நெற்றியில் அவர் பொட்டு வைப்பதில்லை என கூறப்பட்டு வந்தது.
மேலும், இந்து மத நம்பிக்கையில் தீவிரமாக இருந்த ஜெயலலிதா இதனால் தான் தீபாவை ஒதுக்கி வைத்தார் எனவும் பேசப்படுகிறது.
இந்நிலையில், இது நாள் வரை நெற்றியில் பொட்டு வைக்காத தீபா நேற்று ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொள்ளும் போது வட்டவடிவில் பொட்டு வைத்திருந்தார்.
இது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழகத்தில் பெருவாரியாக ஹிந்து மக்களே உள்ளதால் அவர்களை கவர தீபா இப்படி மாறியுள்ளார் என சமூகவலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.