சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி: மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா அடைந்துள்ள வெற்றியை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யன் தாபி, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். இத்தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இதுபோல், கனடா நாட்டு முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘இந்தியர்களால் ஆதரிக்கப்படும் துணிச்சலான தலைவர்’ என்று அவர் மோடிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். அவருக்கும் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் பல வெளிநாட்டு தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் நவாசுதின் சித்திக் உள்ளிட்ட திரை உலகினரும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.